அனைவருக்கும் வணக்கம் .இங்கு இருக்கும் அனைத்துப் பதிவுகளும் என் சொந்தப் பதிவுகள் அல்ல , வலை உலகில் நான் கண்டு ரசித்த பதிவுகளை (அவர்கள் தள முகவரியுடன் ) இங்கே சேர்த்து இருக்கிறேன் .பிடித்து இருந்தால் நீங்களும் படியுங்கள் .உங்கள் பதிவை நான் இங்கே இடுவது பிடிக்கவில்லை என்றால் , சம்பந்தப்பட்ட பதிவிற்கு கீழே பின்னூட்டம் இடுங்கள் உடனே நீக்கி விடுகிறேன் .நன்றி

அதர்வாவை பாலா தேர்ந்தெடுத்தது ஏன்? புதிய தகவல்கள்!

தனது புதிய படத்தில் நடிக்க, நடிகரும், நடிகர் முரளியின் மகனுமான அதர்வாவை தேர்ந்தெடுத்தது ஏன்? என்பது பற்றி புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. வழக்கமாக தன் சொந்தக் கதைகளை மட்டுமே இயக்கும் பாலா இந்த முறை மலையாள நாவல் ஒன்றைப் படமாக்குகிறார். பாலாவின் படங்களில் பிரபலமான எழுத்தாளர்கள் பணியாற்றினாலும், அவர்களை வசனம் எழுத மட்டுமே அவர் பயன்படுத்தி வந்தார்.

இந்த நிலையில் அவன் இவன் படம் சொல்லிக் கொள்ளுமளவு போகாத காரணத்தால், இந்தமுறை அவர் ஒரு நாவலைப் படமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். மலையாளத்தில் வெளியான நாவல் ஒன்றை தமிழில் எரியும் தணல் எனும் பெயரில் மொழி பெயர்த்துள்ளனர். இந்த நாவலைத்தான் சினிமாவாக எடுக்கிறார் பாலா. இரண்டு குழந்தைகளின் பெற்றோர் படும் பாடுகளை சொல்லும் கதை இது.

குடும்ப உறவுகளை மையப்படுத்திய இந்தக் கதையில், கமர்ஷியல் ஹீரோக்கள் நடித்தால் சரிவராது என்பதால், தனது வழக்கமான நாயகர்களை விட்டுவிட்டு அதர்வாவை நாயகனாக்கியிருக்கிறாராம் பாலா.  படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் சூட்டிங்கை தொடங்கவிருக்கிறார் பாலா.


Tags »


bala, atharva, பாலா, அதர்வா,


0 comments

Post a Comment

பழைய பதிவுகள்