கத்ரீனாவைத்தான் அதிகம் பேர் தேடுறாங்க!
பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்பைத்தான் மொபைல் வீடியோக்களில் அதிகம் பேர் தேடியிருப்பதாக புள்ளி விபரம் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக வியூகிளிப் வீடியோ நிறுவனம் சமீபத்தில் ஒரு புள்ளி விபர அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகளவில் முதல் 10 பிரபலங்களில் பாலிவுட் நடிகை, கத்ரீனா கைப் முதல் இடத்திலும், பிரிட்டினி ஸ்பியர் 2வது இடத்திலும், லிண்டசாய் லோகன் 3வது இடத்திலும், கரீனா கபூர் 4வது இடத்திலும் (இந்தியா) மற்றும் சோனக்ஷி சின்ஹா 6வது இடத்திலும் (இந்தியா) உள்ளனர்.
மேலும், இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக்களில் அஜய் தேவ்கான் நடிப்பில் வெளியான ராஸ்கல்ஸ் படத்தில் கங்கனா ரணாவத் நீச்சல் உடையில் வருவது, வித்யா பாலன் நடிக்கும் டர்ட்டி பிக்சர்ஸ், நடிகை ராக்கி சாவந்த் யோகா குரு பாபா ராம்தேவை திருமண செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தது ஆகியவை பிரபலமாக பார்க்கப்பட்டது என வெளியிட்டுள்ளது. உலகளவில், ஆப்பிள் ஐ-போன், பிளாக் பெர்ரி, நோக்கியா செல்போன்கள் உள்ளிட்ட 10 மொபைல் சாதனங்களின் அடிப்படையில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளளது.
Tags »
Katrina kaif, most searched, celebrity, கத்ரீனா கைப்,


0 comments