பெரிய ஹீரோக்களுடன்...! சோனியா அகர்வாலின் கனவு!!
பெரிய ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு விரைவில் எனக்கு வரும் என்று நடிகை சோனியா அகர்வால் கூறியுள்ளார். காதல் கணவர் டைரக்டர் செல்வராகவனுடனான விவாகரத்துக்குப் பிறகு தமிழ் சினிமாவில் 2வது ரவுண்டை தொடங்கியிருக்கிறார் சோனியா அகர்வால். அவர் பல வருடங்களுக்கு முன் ஸ்ரீகாந்துடன் நடித்த சதுரங்கம் படம் தற்போது ரிலீசாகி உள்ளது. ராஜ்கிருஷ்ணா இயக்கும் ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். அடுத்து மணிமாறன் இயக்கும் தீர்வு படத்துக்கு ஒப்பந்தமாகியுள்ளார்.
சினிமாவில் தனது 2வது ரவுண்ட் மகிழ்ச்சி தரும் விதமாக இருப்பதாக பேட்டியொன்றில் கூறியிருக்கும் சோனியா, சினிமாவில் மீண்டும் நடிக்க வந்திருப்பது சந்தோஷமாக உள்ளது. நல்ல கேரக்டர்களில் நடிக்கிறேன். தீர்வு என்ற படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளேன். இதில் எனக்கு வலுவான கேரக்டர். கதை ரொம்ப பிடித்தது. எனவே நடிக்க ஒப்புக்கொண்டேன். என் கேரக்டருக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களாகவே வருகின்றன. விரைவில் பெரிய ஹீரோக்களின் படங்களிலும் நடிக்க வாய்ப்புகள் வரும், என்றும் கூறியுள்ளார்.


0 comments